நவீன ஓய்வு அறைகள் மற்றும் உணவு விடுதியுடன் அசத்தும் மதுரை ரயில் நிலையம் : பொதுமக்கள் வரவேற்பு..!

Scroll Down To Discover

மதுரை ரயில் நிலையத்தில் நவீன ஓய்வு அறைகள் மற்றும் உணவு விடுதியை, தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் வி.ஆா். லெனின் நேற்று திறந்து வைத்தாா்.


இதில் மூன்று நட்சத்திர வசதிகளுடன் கூடிய 8 ஓய்வு அறைகள் மற்றும் 40 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய வகையில் அமைந்த சைவ அசைவ உணவு விடுதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திரு. வி.ஆர். லெனின், அவர்கள் திறந்துவைத்தார்.இதில் தென்மண்டல இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக பொது மேலாளர் திரு. எஸ். ஜெகநாதன், மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் திரு. வி. பிரசன்னா, மதுரை ரயில்வே நிலைய இயக்குனர் திரு. சஜ்ஜன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த புதிய நவீன ஓய்வு அறைகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, தொலைபேசி வசதி, நவீன குளியலறை, கழிப்பறை வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தேனீர் தயாரிக்கும் மின்கலம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் இயங்கும் புதிய உணவு விடுதியில் நவீன காய்கறி நறுக்கும் இயந்திரம், பெரிய அளவிலான உணவு தயாரிக்கும் இயந்திரம், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை பாதுகாக்க குளிர்பதன அறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகள் உள்ளன