நல்ல பாம்பை கொத்த வைத்து காதலனை கொன்ற இளம்பெண் : புதிய காதலனுடன் தப்பி ஓட்டம்.- போலீஸ் வலைவீச்சு.!

Scroll Down To Discover

உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக்காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார். கொலை செய்வது எப்படி என்பதை ‘கிரைம் பேட்ரோல்’ என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார். தனது திட்டத்தின்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு மகி கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்து விட்டார்.

ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மகி ஆர்யா உள்ளிட்ட 4 பேர்தான் கொலையாளிகள் என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறுகையில், பாம்புப் பிடாரன் ஒரு வரை அழைத்து வந்து நல்ல பாம்பை மகி ஏவி விட்டு உள்ளார். மகி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மகி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றார்.