அசோசெம் எனப்படும் தொழில்-வர்த்தக கூட்டமைப்பின் நூறாண்டுகள் என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்:-பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகளை முறைப்படுத்த முயற்சித்தோம். பொருளாதாரத்தை நவீன மயமாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் முன்னேறி வருகிறோம். மாற்றங்களை கொண்டுவரும்போது எதிர்ப்பு வருகிறது. நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

கடந்த 5-6 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த அரசு அதை நிலை நிறுத்தியது மட்டுமல்லாமல், அதை முறைப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டது. தொழில்துறையில் பல தசாப்தங்களாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்தியாவின் பொருளாதார நிலையை முன்னேற்ற ஓய்வின்றி கடுமையாக உழைத்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என கூறினார்.
Leave your comments here...