நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்… துர்கா ஸ்டாலின் தரிசனம்!

Scroll Down To Discover

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தீவிர ஆஞ்சநேய பக்தர். அதனால், கடந்த சில வருடங்களாக சென்னை போரூர் கிரகம்பாக்கத்தில், 180 டன் எடையில் ஆஞ்சநேயருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார்.

இன்று தனது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய அர்ஜுன் “ இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. என் அம்மா, மனைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோயிலில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது. கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி சுமார் 200 டன் எடை கொண்டது. அங்கிருந்து பெரிய டிரக்கில் ஏற்றப்பட்டுச் சென்னை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பணிகள் தற்போது நிறைவுபெற்று அதற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பெரிய விழாவாக நடைபெற வேண்டிய இந்த கும்பாபிஷேகம் மிகவும் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற விசேஷ பூஜைகளில் வெகு சிலரே கலந்துகொண்டனர்.

இன்று நடந்த இந்தக் கும்பாபிஷேகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின். மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். கடந்தவாரம், நடிகர் அர்ஜுன் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.