நகர்ப்புற நக்சல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சிஆர்பிஎப் வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.!

Scroll Down To Discover

டெல்லியிலுள்ள துணைப்பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில்  அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.அப்போது புதிதாக உருவாகியுள்ள ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமித்ஷா:- நகர்ப்புற நக்சல்கள் கொள்கை உடையவர்கள் இல்லை. அவர்கள் பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாத செயல்களை பரப்ப ஏழை மக்களை பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே அவர்கள் மீது எந்த கருணையும் காட்டாமல் கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான சதி செயல்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது கருணை காட்ட மாட்டோம் என பல முறை அமித்ஷா கூறியுள்ளார்.இந்நிலையில், நகர்ப்புற நக்சல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: அடுத்த 6 மாதத்திற்குள் நக்சல்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மருத்துவ மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.