நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் துலிப் என்னும் பயிற்சித் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சரும், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சரும் இணைந்து தில்லியில் நேற்று துவக்கி வைத்தனர்.மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மற்றும் வீட்டுவசதி, நகர உறவுகள் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் எஸ்.பூரி மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் தலைவர் (AICTE) ஆகியோர் இணைந்து ”நகரப் பகுதி கற்றல் உள்ளுறைப் பயிற்சித் திட்டத்தை (துலிப்)” அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) மற்றும் ஸ்மார்ட் நகரங்களில் புதிய பட்டதாரிகளுக்கான உள்ளுறைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகின்ற இந்தத் திட்டத்தை புதுதில்லியில் இன்று இவர்கள் தொடங்கி வைத்தனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர் திரு அமித் கரே, வீட்டு வசதி மற்றும் நகர உறவுகள் அமைச்சகச் செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா, ஏஐசிடிஇ தலைவர் மற்றும் இரண்டு அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஏஐசிடிஇ-யின் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் துலிப் போர்ட்டல் தொடங்கப்பட்டது.
Joint Launch of TULIP – The Urban Learning Internship Program https://t.co/2yfhEZDLOo
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 4, 2020
நகரப்பகுதியில் அனுபவரீதியான கற்றல் வாய்ப்புகளை புதிய பட்டதாரிகளுக்கு வழங்குகின்ற ஒரு செயல்திட்டமாக துலிப் இருக்கிறது இளைஞர்களின் ஆற்றலை உறுதியாக நம்புகின்ற மற்றும் நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய அவர்களின் திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ள பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் பலனாக இது தொடங்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் எதிர்காலத்திற்கு இந்திய இளைஞர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பங்களிப்பை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.நகரப்புற இந்தியாவின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் ஸ்மார்ட் நகர இயக்கமானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது.
https://twitter.com/Secretary_MoHUA/status/1268471299812122624?s=20
இதுவரை ரூ.1,65,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதில் ரூ. 1,24,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் கட்டத்தில் உள்ளன. ரூ.26,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு குடிமக்களுக்குப் பலன் தரத் தொடங்கியுள்ளன. நமது ஸ்மார்ட் நகரங்கள் கோவிட் நெருக்கடியைச் சமாளிப்பதில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன. 47 ஸ்மார்ட் நகரங்கள் தங்களது ஸ்மார்ட் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை நெருக்கடி கால நிர்வாகப் போர்க்கால அறைகளாகப் பயன்படுத்தி வருகின்றன. 34 ஸ்மார்ட் நகரங்கள் தங்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை இவ்வாறு பயன்படுத்துவதற்கான பணிகளை மிக விரைவில் நிறைவேற்ற இருக்கின்றன.நடந்து செல்வதை ஊக்குவிக்கும் வகையில், மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நமது நகரங்கள் ரூ.2,300 கோடி மதிப்பீட்டில் இத்தகைய 151 ஸ்மார்ட் சாலைத் திட்டங்களை முழுமை செய்துள்ளன. மேலும் ரூ.18,300 கோடி மதிப்பீட்டிலான 373 திட்டங்கள் முழுமை அடையும் நிலையில் உள்ளன. ரூ.3,700 கோடி மதிப்பிலான 91 தனியார் பொதுத்துறை பங்களிப்பிலான செயல்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ரூ.21,400 கோடி மதிப்பீட்டிலான 203 செயல்திட்டங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். ரூ.800 கோடி மதிப்பீட்டில் துடிப்பான நகரப்பகுதிகளில் 51 செயல்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன ஸ்மார்ட் நீர் ஆதாரம் தொடர்பான ரூ.2,300 கோடி மதிப்பீட்டிலான 67 செயல்திட்டங்களும் ஸ்மார்ட் சூரிய சக்தியின் கீழ் ரூ.200 கோடி மதிப்பிலான 41 செயல்திட்டங்களும் முழுமை அடைந்துள்ளன.
இந்தியப் பட்டதாரிகளுக்கான மதிப்புக் கூட்டப்பட்ட சந்தை வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு நகரத்திட்டமிடல், போக்குவரத்துப்பொறியியல், சுற்றுச்சூழல், நகராட்சி நிதிநிர்வாகம் முதலான பலதரப்பட்ட பிரிவுகளில் திறமை வாய்ந்தவர்களை உருவாக்குவதற்கும் துலிப் உதவுகிறது. வருங்காலத்திற்கான நகர மேலாளர்களை உருவாக்குவதில் உந்துசக்தியாக இது இருப்பதோடு திறமை வாய்ந்த தனியார் / அரசு சாராத தொழில் நிபுணர்களை உருவாக்கவும் துலிப் உதவும். நிச்சயமாக நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஸ்மார்ட் நகரங்களுக்கும் துலிப் உதவும். இந்திய நகரங்களின் சவால்களைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் துலிப் புத்தம்புதிய யோசனைகளையும், ஆற்றலையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும். மிக முக்கியமாக மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளை துலிப் மேலும் முன்னெடுத்துச் செல்வதோடு அரசு – கல்வியாளர் – தொழிற்சாலை – குடிமைச் சமுதாயம் ஆகியவற்றின் இணைப்புகளையும் சாத்தியமாக்கும். ஆகவே துலிப் – “நகரப்பகுதி கற்றல் உள்ளுறைப் பயிற்சித் திட்டம்“ – இரட்டை இலக்குகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். ஒன்று உள்ளுறைப் பயிற்சிக்கு வரும் பட்டதாரிகளுக்கு அனுபவக் கற்றலை நேரடிப் பங்கேற்பின் மூலம் வழங்குகிறது. இரண்டாவது பட்டதாரிகளின் புத்தம் புதிய செயலாற்றலையும், யோசனைகளையும் ஒருங்கிணைத்து அவற்றை இந்தியாவின் நகர உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.
https://twitter.com/HardeepSPuri/status/1268469933836341248?s=20
2025ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வெற்றிகரமான உள்ளுறைப் பயிற்சி இடங்களை உருவாக்க வேண்டும் என்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ-யின் குறிக்கோளைப் பூர்த்தி செய்வதில் இந்த துலிப் தொடக்கமானது குறிப்பிடத்தக்க படிக்கல்லாக இருக்கிறது. துலிப் செயல்படும் டிஜிட்டல் பிளாட்ஃபாரமானது புதியன கண்டறிதல், ஈடுபடுதல், ஒன்றுசேர்த்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை செயல்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் பிளாட்ஃபார்மை தேவைக்கு ஏற்ப சீரமைக்கலாம். நகர உள்ளாட்சி அமைப்புகள் / ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் உள்ளுறைப் பயிற்சியாளர்கள் என இரண்டு தரப்புகளுக்கும் அவர்களுக்கு ஏற்ற முறையில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த பிளாட்ஃபார்ம் இருக்கிறது இதன் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக சோதித்தறியப்பட்டுள்ளன. இந்த பிளாட்ஃபார்ம் அதன் வடிவமைப்பில் அளவீட்டுக்கு உரியதாக, ஒன்றிணைக்கப்பட்டதாக, வெளிப்படையானதாக இருக்கிறது.
வீட்டுவசதி மற்றும் நகர உறவுகள் அமைச்சகத்துக்கும், ஏஐசிடிஇ-க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு ஏஐசிடிஇ மற்றும் வீட்டுவசதி, நகர உறவுகள் அமைச்சகம் என்ற இரு தரப்பினரின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகளை வகுத்துத் தந்துள்ளது. பிளாட்ஃபாரத்துக்கான தொழில்நுட்ப உதவியை ஏஐசிடிஇ வழங்கும். அதே போன்று வீட்டுவசதி மற்றும் நகர உறவுகள் அமைச்சகமானது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்பம் இல்லாத அம்சங்களில் உதவி அளிக்கும். இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீளாய்வு செய்வதற்காக வீட்டுவசதி அமைச்சகத்தின் செயலாளரைத் தலைவராகக் கொண்ட செயலாக்கக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஏஐசிடிஇ-யின் தலைவர் மற்றும் வீட்டுவசதி அமைச்சக அதிகாரிகள், ஏஐசிடிஇ அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
Leave your comments here...