நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தனித்துப்போட்டி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

Scroll Down To Discover

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது. ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.