தமிழக நாராட்சிகள் என்பது ஏழு மண்டலங்களாக பிரிக்கபட்டு 138 நகராட்சிகள் நகராட்சி இயக்குநரின் சீரிய மேற்பார்வையில் சிறப்பாக மக்கள் பணி நடை பெற்று வருகிறது. ஒரு ஆட்சி மக்கள் மத்தியில். நிலைத்து நிற்பது என்பது உள்ளாட்சி துறை தான். இந்த துறைகளில் தான் மத்திய ,மாநில அரசுகள் தாராள நிதிகள் ஒதுக்கீடு செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கின்றன.
இந்த நகராட்சிகளில் ஆணையர், வருவாய்துறை, நகரமைப்பு பிரிவு, சுகாதார பிரிவு, இஞ்ஜினீயர் பிரிவு , ஆகிய துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் அதாவது 2010 வரையிலும் இந்த துறைக்கு என்று தனி மரியாதை இருந்தன. ஆனால் தற்போது எல்லாம் இந்த துறை 2011 முதல் காசு தான் பிரதானம் என்பது ஆகிவிட்டது. இப்ப கதைக்கு வருவோம். ஏழு மண்டலங்களை கொண்டு இந்த நிர்வாகத்தில் மண்டல இயக்குநர்களாக வர கூடியவர்கள் பல லட்சங்களை கொடுத்து தான் வருகுறார்கள்.
தற்போது நெல்லை, மதுரை, தஞ்சை, வேலூர், சேலம், திருப்பூர், ஆகிய மண்டலங்களில் சில மண்டல இயக்குநர்கள் கொடுப்பதை வாங்குகுறார்கள் .இருப்பினும் நகராட்சிகளின் கிரேடுகளை பொறுத்து சுகாதார ஆய்வாளர்கள் மாதம் ரூ.10் ஆயிரம் என்றும் வருவாய் துறை மாதம் 30 ஆயிரம் என்றும், நகரமைப்பு துறையானர், ரூ.30 ஆயிரம் என நாகராட்சிகளில் மண்டல இயக்குநர்களுக்கு மாமுல் வழங்குகிறார்கள்.
ஆனால் செங்கல்பட்டு மண்டல இயக்குநர் அலுவலகத்தில் மட்டும் மேற்கண்ட மண்டலங்களை விட மூன்று மடங்கு கூடுதலாக வழங்கபடுகிறதாம். இது போக நகராட்சிகளில் ஆய்வு பணி என்ற பெயரில் செல்வது போல் பாவனை காட்டி நகை கடைகள், துணிக்கடைகளில் நகராட்சி ஆணையர்கள் ஒரு முறையும் இன்னொரு நாள் நகரமைப்பு அதிகாரிகளையும் இதே போல் வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என இவர்களை அழைத்து சென்று வீட்டுக்கும், அக்கா, தம்பிக்கும் தேவையான பொருட்களை வாங்கி குவிக்கும் வேலைகள் இன்று வரையிலும் நடந்து வருகின்றனவாம்.
இதனால் நகராட்சி இஞ்ஜினீயர்கள் ஆணையர்கள் பலர் கொந்தளித்து காணப்படுகின்றனராம். காரணம் கடந்த முறை உள்ளாட்சி தலைவர்கள் கிடையாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எத்தனை பேருக்கு நாங்க கொடுப்பது என்ற அழுத்தம் காணப்படுகிறது. இந்த கணக்குகளை பார்த்தால் நகராட்சி மண்டல இயக்குநர்கள் தங்களின் சம்பளத்தையும் மிஞ்சிய கிம்பளத்தை பார்க்கும் போது இப்படி எல்லாம் பணம் வாங்கி சேத்த பணம் தஞ்சுமா…? இல்ல நாங்க வாங்கல என்று குல தெய்வத்தின் மீது சத்தியம் செய்வாங்களா …? ஒரு பானை சோறில் ஒரு பருக்கை தான் சேம்பிள். சம்மந்த பட்டவர்களுக்கு இனி தீபாவளி கெ௱ண்டாட்டம் தான்…!
Leave your comments here...