தோனிக்காக 1,400 கிமீ நடைப்பயணம் – இளைஞரின் நெகழ்ச்சியான சம்பவம்

Scroll Down To Discover

இந்திய கிரிக்கெட்டின் நாயாகன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றாலும், அவர் என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவரின் அப்டேட் என்ன என்பதை குறித்து அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அந்தவகையில் ஒரு ரசிகர்கள், ஆர்வத்தின் உச்சத்தில் 1,400 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஹரியானா மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் அஜய் கில். இவர் ஹரியானாவில் இருந்து தோனியின் மிகத்தீவிர ரசிகர் ஆவர். எப்படியாவது தங்களுடைய சூப்பர் ஸ்டார் தோனியை காண வேண்டும் என நினைத்த அஜய் கில், அதற்காக கடந்த ஜூலை 29ம் தேதி அங்கிருந்து ராஞ்சிக்கு புறப்பட்டுள்ளார். தனது மாநிலத்தில் புறப்பட்டு தோனியின் வீடு இருக்கும் ராஞ்சி ( ஜார்காண்ட்டிற்கு) 1,400 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார்.

அஜய் கில் சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வமுள்ளவர். உள்ளூர் போட்டிகளிலும் அவ்வபோது கலந்துக்கொள்வார் எனக்கூறப்படுகிறது. ஆனால் தோனி ஓய்வு பெற்றது முதல் அஜய்யும் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார்.

இந்நிலையில் தான், மீண்டும் கிரிக்கெட் விளையாடப்போவதாகவும், அதனை தோனியின் ஆசியுடன் தொடங்கவுள்ளதாகவும் கூறி இந்த நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். நீண்ட சிரமங்களுக்கு இடையேயும் அஜய், தோனியின் வீட்டை அடைந்துவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக தோனி அங்கு இல்லை. ஐபிஎல் தொடருக்காக அவர் அந்நேரம் ராஞ்சியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துவிட்டார். எனவே தோனி திரும்பி வீட்டிற்கு வர 3 மாத காலம் ஆகும் அருகில் இருந்தோர் அஜய் கில்லை சமாதானம் செய்தனர்.

தோனி மீது அஜய்கில் வைத்திருந்த பாசத்தால் நெகிழ்ச்சி அடைந்த ராஞ்சி உள்ளூர் இளைஞர்கள், அவருக்காக ஓட்டல் அறை புக் செய்து, பின்னர் அவர் திரும்பிச் செல்ல விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொடுத்தனர். இந்த சம்பவம் தோனி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.