தொடர் புகார் எதிரொலி : இந்து மதத்தை இழிவுப்படுத்தும் “காட்மேன்” வெப்சீரிஸ் டீசரை நீக்கிய ஜீ தமிழ் டிவி…!

Scroll Down To Discover

Godman பெயரில் திரு.பாபு யோகேஸ்வரன்இயக்கத்தில், திரு இளங்கோ தயாரிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் zee5 என்பதில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள டீசர் பட காட்சிகளில் இந்து சாமியார்களை அவமானப்படுத்தும் வகையிலும், இந்துசமய சின்னங்களான காவி உடை, ஓம் உள்ளிட்டவற்றை அவமானப்படுத்தும் வகையிலும், மது அருந்துவது போன்றும் ஆபாசமாகவும் வன்முறையாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதியை சொல்லி அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்து. மேலும் சில இடங்களில் இந்த வெப்சீரிஸ் குழு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசரை சம்பந்தப்பட்ட ஜீ 5 நிறுவனம் யு-டியூப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக மற்றுமாரு புதிய டீசரை இன்று(மே 29) வெளியிட்டனர். பிறகு அதையும் நீக்கிவிட்டனர்.