தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பள்ளர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் தர ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், துறைத் தலைவர்கள், அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஆகியோர் நடைமுறையைப் பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.குடியரசுத் தலைவர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்த நிலையில் சட்டத்திருத்தம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...