தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்.!

Scroll Down To Discover

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் ஆறாவது முறையாக வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் திறக்காத நிலையில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது . அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும் வினியோகிக்கப் பட்டுவருகிறது .

இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். பெற்றோர் சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசி,பருப்பும் பெற்றது தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.