தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராக எஸ்.என். சுப்பிரமணியன் நியமனம்.!

Scroll Down To Discover

தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராக திரு எஸ்.என். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் பொறுப்பு வகிப்பார். பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் விதித் தொகுப்பு 2020-ன் படி பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய பாதுகாப்புக் குழுவை திரு சுப்பிரமணியனின் அனுபவம் சிறப்பாக வழி நடத்தும்.

எல்.அண்ட்.டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கும் தலைசிறந்த பொறியாளரான சுப்பிரமணியன், அந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வர்த்தகத்திற்கு பல ஆண்டுகள் தலைமை வகித்ததோடு, அந்த நிறுவனத்தை நாட்டின் மிகப்பெரிய மற்றும் உலகின் 14-வது பெரிய கட்டுமான நிறுவனமாகவும் வளர்த்துள்ளார்.