இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறது. முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான மருத்துவமனைக்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை பயங்கரவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்து 4 முறை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன
முன்னதாக, கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை இல்லமான ‘ஆண்டிலியா’வுக்கு வெளியே 20 வெடிகுண்டு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதத்துடன் ஸ்கார்பியோ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சச்சின் வாஸ் தலைமையிலான மும்பையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல போலீஸார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக சச்சின் வாஸ் பொறுப்பேற்றார்.
சில நாட்களுக்குப் பிறகு, தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரேனின் மர்மமான மரணத்திற்குப் பிறகு இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. அம்பானியின் வீட்டிற்கு வெளியே கிடைத்த ஸ்கார்பியோவின் உரிமையாளர் ஹிரேன். ஒரு வாரத்திற்கு முன்பு வாகனம் திருடப்பட்டதாக அவர் முன்பு கூறியிருந்தார். அவரது உடல் மார்ச் 5, 2021 அன்று தானேயில் உள்ள ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.
Leave your comments here...