தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ் பண்டாலா நாகேஷ் ராவ் டிசம்பர் 8, 2019 அன்று பொறுப்பேற்றார். சென்னையில் உள்ள அவரது தலைமையகம் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிரிவு கமாண்டுக்கு உட்பட்டதாகும். இவர் இந்திய ராணுவ அகாடமியின் பாராசூட் படை வகுப்பு அணியின் 5-வது படைப்பிரிவில் டிசம்பர் 1982-ல் பணியில் சேர்ந்தார். மரியாதை வாளுக்கான விருதையும், யுத்த சேவை பதக்கம் மற்றும் சேனா பதக்கத்தையும் பெற்றவர்.
பல்வேறு படைப்பிரிவுகளில் அனுபவம் பெற்ற நாகேஷ் ராவ், ஆபரேஷன் புளு ஸ்டார், ஆபரேஷன் விஜய் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் ஆவார்.
சிம்லாவிலும், சென்னையிலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ஜெனரல் ராவ், காடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியில் முதலில் சேர்ந்தார். வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், புதுதில்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆகும். சிறந்த விளையாட்டு வீரரான அவர் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்த வீரர் ஆவார்.
Leave your comments here...