தென்கரை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை பக்தர்கள் தரிசனம்

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை அதி விமரிசையாக நடைபெற்றது.

இக்கோவிலில் மார்கழி உற்சவமண்டல பூஜையை ஒட்டி, சிவாச்சாரியார் கண்ணன் தலைமையில், கணபதி ஹோமம் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது பிறகு 18 வகை வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை ஐந்து மணி அளவில் ஐயப்பன் புலி வாகனத்தில் புஷ்ப அலங்காரம் தேரில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க கடைவீதியில் ஊர்வலமாக எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அருள் பெற்றனர். ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.