தூய்மை இந்தியா.! இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

Scroll Down To Discover

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது.தூய்மை பணி தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களுக்குட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் நகரில் நடைபெறும் ’தூய்மை இந்தியா’ நிகழ்ச்சியில் இதற்கான விருதினை பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், புறநகர் மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார்.