துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Scroll Down To Discover

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் தனித்தனியாக மேல்முறையிட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும் புதுவை ஆளுநர் – அரசு இடையே அதிகார பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Yagnasri Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal