தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

Scroll Down To Discover

இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பாராளுமன்றக் குழு ஒன்று  இந்தியாவுக்கு வந்து இருந்தது. பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 28 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உயர்மட்டக் குழுவினர் பேசி ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

https://twitter.com/narendramodi/status/1188799546941329408?s=19

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவானது, இன்று ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு சென்று, ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் பலாரையும் சந்தித்து, ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இந்த குழு  துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடுவை சந்தித்தார்கள்.

https://twitter.com/VPSecretariat/status/1188815282669666310?s=19

இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி ட்வீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பயணத்தினால் பிரதிநிதிகள் குழுவினர் பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மை குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Pictures: The delegation of European Union (EU) MPs visited Dal lake in Srinagar

மேலும் ஐரோப்பிய ஒன்றிய எம்பிகள் குழு இன்று ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு பயணம் செய்தார்கள்.பின்னர் ஸ்ரீநகரில் உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களையும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்தது.

By
Krish Harikrishnan
Coimbatore