தீவிரவாதிகளுக்கு நிதி உதவி – காஷ்மீரில் 14 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை..!

Scroll Down To Discover

தேசிய புலனாய்வு முகமை காஷ்மீரில் 14 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காஷ்மீரில் நேற்று பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.

இது குறித்து என்ஐஏ.யின் செய்தி தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு, நிதியுதவி, வெடிகுண்டு சதி போன்றவற்றின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

ஜம்மு, குல்காம், புல்வாமா, அனந்தநாக் உள்ளிட்ட 14 இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சோதனையில் டிஜிட்டல் கருவிகள், சிம் கார்டு, டிஜிட்டல் சேமிப்பு கருவிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ’’ என்றார்.