தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது – பிரதமர் மோடி..!

Scroll Down To Discover

‘பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பற்றி கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பாக பேசினார். மேலும் அந்த படத்துக்கு தடை விதிக்க கோரும் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். எனினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கர்நாடக தேர்தலையொட்டி பெல்லாரியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை இந்த படம் பேசுகிறது. இது பயங்கரவாதத்தின் கேவலமான உண்மையைக் காட்டுகிறது. பயங்கவாதிகளின் நடவடிக்கையை அம்பலப்படுத்துகிறது.

தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இந்த தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படிப்பட்ட கட்சியால் கர்நாடகத்தை எப்படி காப்பாற்ற முடியும்? பயங்கரவாத சூழல் இருந்தால் தொழில், ஐடி, விவசாயம் மற்றும் புகழ்பெற்ற கலாசாரம் என அனைத்தும் அழிந்துவிடும்’ என்று பேசியுள்ளார்.