தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு .!

Scroll Down To Discover

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் கோயில், பேருந்து நிலையம், நாட்டாணிக்கோட்டை ஆகிய இடங்களில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. 

நிலைய அலுவலர் ஐ.செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் சுப்பையன், ரஜினி, நீலகண்டன், அருண், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதையொட்டி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவது, கைகளை சோப் போட்டு கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி, துண்டுப் பிரசுரங்கள், முகக்கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.