தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் இன்று 12 லட்சம் விளக்கு ஏற்ற ஏற்பாடு..!

Scroll Down To Discover

தீபாவளியை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அங்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அழைப்பின்பேரில், மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டியும் பங்கேற்கிறார். மேலும், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா, லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.