திரௌபதி படம் : நாடகக் காதலை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வகையில் உள்ளது – ஹெச்.ராஜா

Scroll Down To Discover

அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட், ஷீலா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆணவக்கொலை பற்றியது என்கிறார்கள். இதனால் மோதல் வருமோ என்றெல்லாம் கூட சிலர் அச்சப்படுகிறார்கள்.இன்று படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் திரௌபதி என்ற திரைப்படத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா:- எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக கொண்டும் இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசங்களை இந்த படம் காட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


இது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டரில்:- இன்று திரௌபதி திரைப்படம் பார்த்தேன்.அனைத்து பெற்றோரும் தங்களுடைய வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம். நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு என கூறியுள்ளார்.!