திருவில்லிபுத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

தேரடி வீதி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் தீடீரென தீப்பிடித்து எரியத்துவங்கியது. வண்டியில் திடீரென தீப்பிடித்ததால் அதிர்ச்சியடைந்த முனிஸ்வரன், வண்டியிலிருந்து பாய்ந்து குதித்து தப்பினார். அருகிலிருந்தவர்கள் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் தீயை, விரைந்து அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், ஓடிக்கொண்டிருந்த வண்டியில் திடீரென தீப்பிடித்த சம்பவம், அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.