திருமழிசை தற்காலிக சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் அமைப்பு – முதல்வரின் பாராட்டை பெற்ற அரவிந்தன் ஐபிஎஸ்…!

Scroll Down To Discover

சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் அமைத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு இருப்பதால் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகி விட்டது.
கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் இன்று உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஒருவரிடமிருந்து பரவத் தொடங்கிய இந்தத் தொற்று, இன்று லட்சத்தை நெருங்கி உள்ளது. 50,000க்கும் மேலான மக்களைக் காவு வாங்கி உள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிப்பின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்குச் சாத்தியம் உண்டு. தொற்று ஏற்படும் வழியை அடைப்பதே தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு நம்முன் இருக்கும் ஒரே வழி. சமூக இடைவெளியின் நோக்கமும் அதுவே.

சமூக இடைவெளி, உங்களுடைய பாதுகாப்பை மட்டுமல்லாமல்; மற்றவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதை ஒருவர் மீறினாலும், சமூக இடைவெளி யின் ஒட்டுமொத்த நோக்கமும் சிதைந்துவிடும். இதனால்தான் சமூக இடைவெளி என்பது வெறும் கோரிக்கையாக அல்லாமல், உத்தர வாக அறிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அலுவலகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதுபோன்ற இடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் நவீன கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவலின் மையமாக மாறிய நிலையில், கோயம்பேடு மார்கெட் மூடப்பட்டது. இதனை அடுத்து, சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு முடிவு செய்து மாற்றி அமைத்தது.


இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் அமைத்துள்ளனர். இதனை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ் அவர்கள் அறிமுகபடுத்தினார். இதன் மூலம் சமூக இடைவெளியை (2.5 அடி) கடைபிடிக்கவிட்டால் (Automatic Alarm) ஒலியெழுப்பி அங்கிருக்கும் நபர்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள IRIS கருவியின் பயன்பாட்டை அரவிந்தன் ஐபிஎஸ் அறிமுகபடுத்தினார்.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், இந்த பரிசோதனை வெற்றி பெரும் பட்சத்தில் திருவள்ளூரில் அனைத்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரவிந்தன் ஐபிஎஸ் பாராட்டினார்.அதில்:- சமூக இடைவெளியை (2.5 அடி) கடைபிடிக்கவிட்டால் (Automatic Alarm) ஒலியெழுப்பி அங்கிருக்கும் நபர்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள IRIS கருவியின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கும் @aravindhanIPSஅவர்களுக்கும் @TNTVLRPOLICE நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!