திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்

Scroll Down To Discover

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று காலை அரசாணை வெளியிட்டது.

மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.