திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் கனரா வங்கி கொள்ளை முயற்சி.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் பகுதியில் கனரா வங்கி செயல்படுகிறது நிலையில் நேற்று இரவு வங்கி ஊழியர்கள் வங்கியை மூடி வீட்டுக்கு சென்றனர் .

அதிகாலை மூன்று மணியளவில் கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கடப்பாரையுடன் வந்துள்ளனர் இவர்கள் முன் கதவு பூட்டை உடைத்து. பேங்க் வாசல் கதவின் பூட்டை உடைத்து எதிர்ப்புறம் வீசி சென்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் நிலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.மேலும், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

செய்தி: Ravi Chandran