ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி, உரிய சுகாதார வழிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை முடங்கி பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆனால் ஏழுமலையான் பக்தர்கள் மட்டும் தங்களது வாரி வழங்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களால் இயன்றதை திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக, நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி அருகே உள்ள கொப்பரவந்தலப் பள்ளியைச் சேர்ந்த கொப்பேரா சாய்சுரேஷ் மற்றும் கொப்பேரா குமார் ஆகியோர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 60 கிலோ எடையிலான தாமிரத்தால் செய்யப்பட்ட கொப்பரை உண்டியலை தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர். அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
கடந்த 200 ஆண்டுகளாக தங்கள் குடும்பம் இதுபோன்ற உண்டியல்களை ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
Leave your comments here...