திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு

Scroll Down To Discover

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க நிதி ஒதுக்கியது தமிழக அரசு.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினர், திருநங்கைகள் என மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு த ஊரடங்கு தொடரும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினருக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி அளிக்க ரூ. 28 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 3-வது முறையாக தமிழக அரசு ரூ.1000 நிதிஉதவி வழங்கியுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களிலுள்ள 9,882 பேருக்கு ரூ.1,000 நிதி உதவி அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது