திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய இந்து விரோதி திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – பாஜக ஹெச் ராஜா

Scroll Down To Discover

திருஞானசம்பந்த பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர். மூன்று வயது பாலகனாக ஞானம் பெற்ற சம்பந்தர், தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தரிசிப்பதையும் அவற்றைப் பற்றி பாடுவதையுமே தம் பணியாகக் கொண்டிருந்தார். சைவத்தையும் தமிழையும் அயல் மத ஆதிக்கத்தில் இருந்து மீட்ட தமிழாகரர் திருஞானசம்பந்தப் பெருமான்.

இது குறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் :- ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்.இதை அனுமதிக்க முடியாது. @CMOTamilNadu
https://twitter.com/HRajaBJP/status/1335957444703514624?s=19
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்- திருஞானசம்பந்தர் பெருமானை களங்கப் படுத்த நினைக்கும் திருமாவளவனுக்கு உண்மை வரலாற்றை உரைக்கின்றோம் உணர்ந்து மன்னிப்புக் கோரவில்லை எனில் தமிழின துரோகம் புரிந்த குற்றத்திற்காக திருமாவளவனுக்கு எதிராக ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்து உள்ளார்.
https://twitter.com/JananesaN_NewS/status/1335829072388136968?s=19