திரிபுரா மாநில முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாகா பதவியேற்றார்..!

Scroll Down To Discover

பிரதமர் முன்னிலையில், திரிபுரா மாநில முதல்வராக 2வது முறையாக, மாணிக் சஹா இன்று(மார்ச் 08) பதவியேற்றுக் கொண்டார்.

திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் 60 தொகுதிகளில் 55 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் திரபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா இன்று(மார்ச் 08) பதவியேற்றார்.

இந்நிகழ்ச்சி அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்றது. திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹாவுக்கு கவர்னர் சத்யதேவ் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.