திரவம் ஊற்றப்பட்டு காயத்துடன் ஒரு மாதமாக பரிதவித்து சிகிச்சைக்காக ஏங்கும் காளை பசு மாடுகள் – மனிதநேயம் எங்கே போனது.?

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் விரிவாக்க பகுதியான சூர்யா நகர் பகுதியில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ரெண்டு காளைமாடு ஒரு பசு மாடு மீதுமர்ம நபர்கள் சிலர் மாட்டின் உடம்பின் மீது ஊற்றியுள்ளனர்.

இதனால் அந்த மாடுகள் உடலில்தீக்காயம் ஏற்பட்டது போல் காயமடைந்து பரிதவித்து வருகிறது. இதனால், இந்த மாடுகள் சரியான தகுந்த சிகிச்சை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மாடுகளின் நிலைமை அறிந்த அப்பகுதி குடியேற்றவாசிகள் பலமுறை தன்னார்வ அமைப்பு அரசு அலுவலர்களிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. விலங்குகளை பாதுகாக்க யாருக்குமே மனித நேயம் இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே , சம்மந்தப்பட்ட கால்நடை துறை மற்றும் சுகாதாரத்துறைபாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.