இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, திமுகவின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தயக்கம் இன்றி செல்வதும், அங்கு வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், கோவில்களுக்கு சென்றால், திருநீறை அழிப்பது, பிரசாதத்தை வாங்க மறுப்பது ஆகியவற்றை தொடர்கின்றனர். இதனால், திமுகவை, பாஜக மட்டுமின்றி இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை உட்பட, 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் உறுதிமொழி என்ற தலைப்பில், திமுகவுக்கு எதிராக ஓட்டளிக்க வலியுறுத்தி, இந்து தெய்வங்களின் படங்களுடன் இந்து அமைப்பினர், ‘வாட்ஸ் – ஆப்’, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.மேலும் சேலம் மாவட்டத்தில் வீடுகள் தோறும், துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். இதனால், திமுக வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Leave your comments here...