லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் கடந்த வாரம், எஸ்.எஸ்.எப்., எனப்படும் சிறப்பு எல்லைப் படைப் பிரிவை சேர்ந்த நைமா டென்சின் என்ற திபெத்திய வீரர், கண்ணி வெடி வெடித்ததில் உயிரிழந்தார். நைமா டென்சினின் இறுதிச் சடங்கு, நேற்று லடாக்கின் லே பகுதியில் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ அதிகாரிகள், திபெத்திய சமூகத்தினர் என பலரும் பங்கேற்றனர். இதில் பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் கலந்துகொண்டு, வீரரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன் மூலம் இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை கொடுத்துள்ளது. டென்சின் திபெத்திய அகதி சமூகத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு லடாக்கில் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.திபெத்தை சீனா தனது நாட்டை சேர்ந்த ஒரு பகுதியாக கருதுகிறது.
தற்போது சீனா அத்துமீறலால் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், திபெத் சிறப்பு பாதுகாப்புப் படை வீரா் ஒருவரின் இறுதிச் சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...