கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் 2-வது சிவாலயமானது திக்குறிச்சி மகாதேவர் கோவில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவிலில், கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி பூட்டை உடைத்த மர்ம கும்பல் அங்கிருந்த பழமை வாய்ந்த 2.5 கிலோ எடையுள்ள பழமையான ஐம்பொன் சிவன் சிலைகளும், 4 கிலோ எடையுள்ள ஐம்பொன் முருகன் சிலை, 4 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை மற்றும் நந்தி சிலைகளும், தங்க மாலைகள், ருத்ராட்சம், பொட்டு, வெள்ளி திருமுகம், ஆராட்டுக்கு பயன்படும் வெள்ளி கொடை மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று உள்ளார்கள். இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றக்கோரியும், கொள்ளையர்களை உடனே, கைது செய்யக்கோரியும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது பற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் மஹாதேவர் கோவிலில் இருந்து திருடப்பட்ட பழைமையான 2 ஐம்பொன் சிலைகள் கேரளாவில் மீட்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் பீமா பள்ளியைச் சேர்ந்த ஷா நவாஸ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
https://youtu.be/svjqBpq8TdE
அவன் தனது நண்பன் உசேன், தோழி சுமிதா ஆகியோருடன் சேர்ந்து, சிலைகளை திருடி கேரளாவுக்கு தப்பிச்சென்றதும், அவற்றை புராதன பொருள் விற்பனையாளரான சதிஷ் பாபுவுக்கு பேரம் பேசி விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்பாபு பதுக்கி வைத்திருந்த சிலைகள் மீட்கப்பட்டனர். பின்னர் கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave your comments here...