தளர்வு இல்லா முழு ஊரடங்கில் போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு..!

Scroll Down To Discover

வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக மதுரவாயல் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.