ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான்கள் கொன்றாலும் ஆப்கானைவிட்டு வெளியேறப்போவதில்லை என அந்நாட்டின் கடைசி இந்து அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அச்சமடைந்த பலரும் அங்கிருந்து வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
ஆனால், காபூலில் உள்ள ரத்தன்நாத் கோயில் அர்ச்சகராக உள்ள ராஜேஷ் குமார் ஆப்கனை விட்டு வெளியேற போவதில்லை எனக்கூறியுள்ளார். தனது உயிரே போனாலும் அந்நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என இந்து அர்ச்சகர் ஒருவர் தெரிவித்திருப்பது கவனத்தைப் பெற்று வருகிறது.
பரத்வாஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்:- “ காபூலில் உள்ள ரட்டன் நாத் கோயிலின் அர்ச்சகராக உள்ள பண்டிதர் ராஜேஷ் குமார், ‘காபூலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதற்காக உதவிகள் செய்வதாகவும் சில இந்துகள் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் என்னுடைய முன்னோர்கள் இந்த கோவிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சேவை ஆற்றியுள்ளனர். நான் அதை கைவிட மாட்டேன். தாலிபான்கள் என்னை கொன்றாலும், எனது சேவையாகவே அதை கருதுவேன்’ என்று தெரிவுள்ளார்” என பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் காபூல் நகரில் உள்ள குருதுவார் ஒன்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...