தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Scroll Down To Discover

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாவிடில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16-வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகுதி வாந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.