அனைத்து இராணுவ செயல்பாடுகளுக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். அந்தவகையில் போரின் போது இந்திய ராணுவ வீரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சி என் ஆர் என்று அழைக்கப்படும் கம்பாட் நெட் ரேடியோ என்ற வானொலி சாதனத்தை பயன்படுத்துவர்.
பாரம்பரிய சி என் ஆர் கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடுவதற்கு ஏதுவாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென் பொருளை அடிப்படையாகக் கொண்ட வானொலி சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இது போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகளில் தரவுகள் பரிமாற்றம், இரைச்சலான சூழ்நிலைகளிலும் துல்லியமான தகவல்களை வழங்குதல், கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.தற்சார்பு இந்தியா கொள்கைக்கு இணையாக, மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு முறையில் தன்னிறைவை அடைவதற்கு இது போன்ற கருவிகள் வழிவகை செய்யும்.
Leave your comments here...