தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா : குருமகாசந்நிதானம் ஆசியுரை வழங்கினார்

Scroll Down To Discover

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா, தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் திட்டத் தொடக்க விழா, தமிழ் மாணவர்களுக்கு ஏழு நாட்கள் பேச்சுக் கலைப் பயிலரங்கம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரியின் பழைய வளாகக் கருத்தரங்க அறையில் (சிவஞான நிலையம்) நடைபெற்றது.


விழாவை தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 27வது குருமகா சந்நிதானம் அவர்கள் எழுந்தருளி ஆசியுரை வழங்கித் தொடங்கி வைத்தார்கள்.