தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தியபிறகு,மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும்
https://twitter.com/iVijayakant/status/1611961954696036352?s=20&t=XoqtsPIj19vgGrhGnBIRSw
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக ஐடி என்ற அறிவித்துள்ளன. இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழ்நாடு மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
Leave your comments here...