நெட்வொர்க் 18 நடத்தும் ரைசிங் இந்தியா நிகழ்வு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்தவர்களை அழைத்து கவுரவிப்பது இந்த நிகழ்வின் நோக்கமாக உள்ளது. நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
இன்றைய நிகழ்வில், நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான கலந்துரையாடலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான விஷயத்தில் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் உண்டானது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் இவ்வாறான ஒரு பதிலை தெரிவித்துள்ளார் அமித்ஷா.
ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு , ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் பா.ஜ. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை பொதுவில் வைத்து அகந்தையுடன் ராகுல் கிழித்து எறிந்தார்.வரப்போகும் 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.
Leave your comments here...