விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ் நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசால் போடப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும்.— M.K.Stalin (@mkstalin) December 6, 2021
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநிலம், கடற்கரை சதுப்பு நில ஏரியாகும். வங்காள விரிகுடாவின் அருகில் ஏறக்குறைய புதுச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது.
இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த சதுப்பு நில ஏரி, வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாக உள்ளது.அது மட்டுமின்றி, அவற்றிற்கான இனைப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாகவும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...