தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பு..!

Scroll Down To Discover

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.