தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா – பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்

Scroll Down To Discover

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம், 17,591 பேருக்கு பட்டங்களும், பட்டயங்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும் கலந்து கொள்கிறார்.


பல்கலைக்கழகம் பற்றி : இந்த பல்கலைக்கழகத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், நர்சிங், ஆயுஷ், பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை மற்றும் சுகாதார அறிவியல் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 686 நிறுவனங்கள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

41 மருத்துவ கல்லூரிகள், 19 பல் மருத்துவ கல்லூரிகள், 48 ஆயுஷ் கல்லூரிகள், 199 நர்சிங் கல்லூரிகள், 81 மருந்தியல் கல்லூரிகள், முதுநிலை மருத்துவ படிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிறுவனங்கள் என இவை தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளன