தமிழகத்துக்கு ரூ. 12,305 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கியது மத்திய அரசு

Scroll Down To Discover

மத்திய அரசு 2019-20 நிதியாண்டில் தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவைப் போக்குவரத்து வரி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கியுள்ளது அதே போல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95,444 கோடி ஆகும்.

2019-20க்கான இழப்பீட்டை வெளியிட, 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தப்பட்டது.மேலும், மத்திய அரசு ரூ.33,412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது.