தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க திட்டம் – மத்திய அரசு தகவல்..!

Scroll Down To Discover

தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

சிஎன்ஜி என்று அழைக்கப்படும் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுக்கான நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநகர எரிவாயு விநியோக அமைப்புகள் நிறுவி வருகின்றன.

பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு மையம் வழங்கியுள்ள தகவலின் படி, 2019-20-ம் நிதியாண்டில் 4632 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும், 2020-21-ம் நிதியாண்டில் 3678 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும், 2021-22-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2462 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,628 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன; இவற்றில் தமிழகத்தில் 68 உள்ளன. நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 890 நிலையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.