தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடு..!

Scroll Down To Discover

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மொத்தம் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், நாடு முழுவதும் புதிதாக 31 மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமையவுள்ளன. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஆகும் மொத்த நிதி தலா 325 கோடியில் மத்திய அரசு 60 சதவீத நிதியான 195 கோடியும், தமிழக அரசு சார்பில் 40 சதவீத நிதியான 130 கோடியும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதில் தமிழக அரசு தலா 100 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 600 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது