தமிழகத்தில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!

Scroll Down To Discover

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறவினர் கொலை வழக்கில் தொடர்பாக கடலூரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக நித்தியானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நித்தியானந்தம் கடலூர் பெண்ணை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நித்தியானந்தம் தங்கி இருந்ததாக கூறப்படும் வீட்டில் தற்பொழுது தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டில் உள்ளவர்களிடம் நித்தியானந்தம் எப்பொழுது இங்கு வந்தார், இந்த வீட்டில் உள்ளவர்கள் யார் யார் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நித்தியானந்தம் வாடகைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.